UPDATED : அக் 29, 2026 01:24 PM
ADDED : அக் 29, 2026 01:25 PM
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு:
விழுப்புரம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய மூன்று தாலுகாக்களை தலைமையிடமாகக் கொண்டு டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 மற்றும் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு ஓ.எம்.ஆர்., முறையில் வரும் 1ம் தேதி காலை காலை 9:30 முதல் பகல் 12:30 மணி வரை 30 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 135 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
விண்ணப்பதாரர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வுக் கூடத்திற்கு அனுமதிச் சீட்டுடன் வர வேண்டும். காலை 9:00 மணிக்குமேல் வரும் தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். பகல் 12:30 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வில் கருப்பு பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் கார்டு, கடவுச்சீட்டு, டிரைவிங் லைசென்ஸ், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகலைக் கொண்டு வர வேண்டும்.
தேர்வுக் கூடத்திற்கு உள்ளே மொபைல் மற்றும் மின்னணு கை கடிகாரம், புளுடூத் போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைக்கடிகாரங்களை பயன்படுத்தலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
