ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் 'தினமலர் பட்டம்' வினாடி வினா போட்டி
UPDATED : நவ 07, 2026 01:37 AM
ADDED : நவ 07, 2026 01:37 PM
விருத்தாசலம்:
விருத்தாசலம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ், வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரி 'தினமலர் பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து, 'பதில் சொல்; பரிசு வெல்' என்ற மெகா வினாடி வினா போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமம், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் இன்று நடந்த வினாடி வினா போட்டியில், 500 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இதில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு தகுதி சுற்று நடந்தது. போட்டி துவக்க நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வர் சக்திவேல் தலைமை தாங்கினார்.
போட்டியின் இறுதியில், ஏழாம் வகுப்பு மாணவிகள் சிந்தியா, ரித்திகா அணி முதலிடம், எட்டாம் வகுப்பு மாணவிகள் ஐஸ்வர்யா, சிவகாமி அணி இரண்டாம் இடம் பிடித்தனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு கல்வி குழும தலைவர் சுரேஷ், தாளாளர் இந்துமதி சுரேஷ் சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கங்களை வழங்கி பாராட்டினர். இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
போட்டியில் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள், புதுச்சேரியில் மாநில அளவில் நடக்கும் மெகா வினாடி வினா போட்டிக்கு தகுதி பெற்றன.
