தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி

கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி வினா போட்டி


UPDATED : நவ 17, 2026 05:56 PM

ADDED : நவ 17, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 05:56 PM ADDED : நவ 17, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக்குழுமம் இணைந்து நடத்தும் 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி - வினா போட்டி, கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இப்போட்டியில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில், 16 பேர் தேர்வு செய்து, 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு, 3 சுற்றுகளாக போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

இதில், 12ம் வகுப்பு மாணவர்கள் தேவா, அஷ்வின் ஆகியோர் முதலிடமும், 8ம் வகுப்பு மாணவர்கள் தனுஷ்வந்த், ஹரிகரன் ஆகியோர் இரண்டாமிடமும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, தொகுதி த.வெ.க., எம்.எல்.ஏ., அருள்விக்னேஷ் கேடயம் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி மாணவர்களை பாராட்டினார். பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரான வழக்கறிஞர் ராஜேஷ்வரன் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில், பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் கோவிந்தசாமி, அசோக்குமார், ஆசிரியர்கள் முருகன், ராமு மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us