தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உணவு சரியில்லாததை கண்டித்து விடுதி மாணவர்கள் போராட்டம்

உணவு சரியில்லாததை கண்டித்து விடுதி மாணவர்கள் போராட்டம்

உணவு சரியில்லாததை கண்டித்து விடுதி மாணவர்கள் போராட்டம்


UPDATED : நவ 17, 2026 05:55 PM

ADDED : நவ 17, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 05:55 PM ADDED : நவ 17, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம்:
உணவு சரியில்லாததை கண்டித்து அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் கல்லுாரி விடுதி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக பொறியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில், சுமார் 500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இந்த விடுதியில் வழங்கப்படும் உணவு சரியில்லாமல் இருந்தது. மேலும், விடுதில் தண்ணீர் வசதி இல்லாமலும், கொசு கடியினால் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனைக் கண்டித்து நேற்று மாலை இந்திய மாணவர் சங்கத்தினர் தலைமையில் விடுதி மாணவர்கள், பொறியியல் கல்லுாரி வளாக வாயிலில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கல்லுாரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர்களிடம் பல்கலை பதிவாளர் மோகன், ஏ.எஸ்.பி., சத்ரியா கவின் ஆகியோர், விடுதியில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மாணவர்கள் கலைந்து சென்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us