தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எஸ்.ஜி., பேராசிரியைக்கு கிடைத்தது 'எக்ஸலன்ஸ்' விருது

பி.எஸ்.ஜி., பேராசிரியைக்கு கிடைத்தது 'எக்ஸலன்ஸ்' விருது

பி.எஸ்.ஜி., பேராசிரியைக்கு கிடைத்தது 'எக்ஸலன்ஸ்' விருது


UPDATED : நவ 17, 2026 05:54 PM

ADDED : நவ 17, 2026 05:55 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 17, 2026 05:54 PM ADDED : நவ 17, 2026 05:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
உலக சுகாதார அமைப்பு, கொரிய சுகாதாரம் மற்றும் நலவாழ்வு அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சியில், பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரி நுண்ணுயிரியல் துறை ஆராய்ச்சி உதவிப் பேராசிரியர் ராஜேஸ்வரி சோமசுந்தரம், எக்ஸலன்ஸ் விருது பெற்றார்.

கொரியாவில் உள்ள கே-பயோஹெல்த் மையத்தில், அக்., 12 முதல் நவ.6 வரை நான்கு வாரங்கள் நடந்த இப்பயிற்சியில் 15 நாடுகளைச் சேர்ந்த 21 விஞ்ஞானிகள் பங்கேற்றனர். இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே விஞ்ஞானியான ராஜேஸ்வரி, தொழில்துறை அனுபவம், தொழில்நுட்ப நிபுணத்துவத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உலகளாவிய உயிரி உற்பத்தித் திறனை மேம்படுத்துதல், எதிர்கால பெருந்தொற்று, பொது சுகாதார அவசரநிலைகளை எதிர்கொள்ளும் வகையில் விஞ்ஞானிகளை தயார்படுத்துதல் ஆகியவை பயிற்சியின் நோக்கமாக இருந்தன. நிறைவு விழாவில் அவருக்கு விருது வழங்கப்பட்டது.

ராஜேஸ்வரி இப்பயிற்சியில் பெற்ற அறிவை தடுப்பூசி தொழில்நுட்பம், ஆன்டிபாடி உற்பத்தி, மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்துவதுடன், சர்வதேச ஒத்துழைப்புகளை உருவாக்கவும், உயிரி மருந்து ஆராய்ச்சி, உற்பத்தித் திறனை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us