UPDATED : அக் 14, 2026 05:51 PM
ADDED : அக் 14, 2026 05:53 PM
அ நிறம் | அளவு
எங்கள் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'பட்டம்' இதழை தினசரி சுவாசிப்பவர்களாக விளங்குகிறார்கள்.
'வாழ்வியல் முறைகள்', 'போட்டி தேர்வுக்கான லட்சிய இலக்கண பாதைகள்', 'நிகழ்காலத்தில் எதிர்காலத்தை செதுக்குவது எப்படி?', என்ன படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? என்னை நான் கண்டுபிடிப்பது எப்படி? போன்ற விசால பார்வையை பல்நோக்கு விதத்தில் மாணவர்களுக்கு எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் 'தினமலர் பட்டம்' இதழ் கொடுக்கும் சேவை அளப்பரியது .
எங்கள் தவ அமுதம் பள்ளி மாணவர்களின் வளமான வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு படிக்கட்டிலும் 'தினமலர்' துணை நிற்பது கண்டு பெருமிதம் கொள்கிறேன். என்றும் 'தினமலர்' சேவை தொடர வேண்டும்.
செங்கோல், தாளாளர், தவ அமுதம் பதின்ம மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீமுஷ்ணம்.
