sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் வழிகாட்டி கல்வித் திருவிழா; புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது

/

தினமலர் வழிகாட்டி கல்வித் திருவிழா; புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது

தினமலர் வழிகாட்டி கல்வித் திருவிழா; புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது

தினமலர் வழிகாட்டி கல்வித் திருவிழா; புதுச்சேரியில் கோலாகலமாக துவங்கியது


UPDATED : மார் 30, 2024 12:00 AM

ADDED : மார் 30, 2024 11:36 AM

Google News

UPDATED : மார் 30, 2024 12:00 AM ADDED : மார் 30, 2024 11:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
தினமலர் நாளிதழ் மற்றும் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் மெகா கல்வி திருவிழாவான மூன்று நாள் வழிகாட்டி நிகழ்ச்சி புதுச்சேரி சித்தன்குடியில் பாலாஜி தியேட்டர் பின்புறமுள்ள ஜெயராம் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
அசத்தல் அரங்குகள்

வழிகாட்டி நிகழ்ச்சியின் ஸ்டால்களை கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து வழிகாட்டி கருத்தரங்கினை கோவை ஸ்ரீ கிருஷ்ணா காலேஜ் ஆப் டெக்னாலஜி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் பென் ரூபன், கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார், சென்னை அமிர்தா விஸ்வ வித்யா பீடம் மக்கள் தொடர்பு அதிகாரி ரமேஷ் கண்ணன், சென்னை ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி பேராசிரியர் மகேந்திரன், ஆடிட்டர் சேகர், இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன் ஆகியோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
மாணவர்கள் ஆர்வம்

வழிகாட்டி நிகழ்ச்சி காலை, 10:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் காலை 8.30 மணி முதல், ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் ஆர்வத்துடன் வந்திருந்தனர். ஒவ்வொரு ஸ்டால்களாக சென்று பார்வையிட்டனர். ஒவ்வொரு கல்லுாரியிலும், என்னென்ன படிப்புகள் இருக்கின்றன. அங்குள்ள வசதிகள் விவரம், படிப்பிற்கான வேலை வாய்ப்புகள் குறித்த விவரம், கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஒரே இடத்தில் மாணவர்கள் தெரிந்து தெளிவு பெற்றனர்.
கருத்தரங்கம்

வழிகாட்டி நிகழ்ச்சியில் காலை 10 மணி முதல் 12.30 மணிரை நடந்த முதல் அமர்வில் எதிர்கால பொறியியல் படிப்புகள் என்ற தலைப்பில் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் பேராசிரியர் பென்ரூபன், விண்வெளி அறிவியல் படிப்புகள் குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ராஜராஜன், சி.ஏ., சி.எம்.ஏ., ஏ.சி.எஸ்., படிப்புகளை குறித்து ஆடிட்டர் சேகர் விளக்கம் அளித்தனர். மாலை 3 முதல் 5.30 மணி வரை நடந்த இரண்டாம் அமர்வில் சென்னை ஐ.ஐ.டி., ஆன்லைன் படிப்புகள் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன், மரைன் கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேலாண்மை படிப்புகள் குறித்து சுரேஷ்குமார், கேரியர் கவுன்சிலிங் குறித்து அஸ்வின் ஆகியோர் பேசினர்.
பொது அறிவு போட்டி

நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, தினமலர் நாளிதழ் சார்பில், பொது அறிவு போட்டி நடத்தப்பட்டு, சரியான விடை எழுதியவர்களுக்கு, லேப்டாப், வாட்ச், டேப்லெட் பரிசாக வழங்கப்பட்டன.
இதில் மாணவ, மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வத்தோடு பங்கேற்று ஒரு லேப்டாப், ஒரு டேப்லெட் மற்றும் 10 ஸ்மார்ட்வாட்சுகளை பரிசாக பெற்றனர்.
அனுமதி இலவசம்

வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 30 ம்தேதியும் நாளை 31ம் தேதி வரை நடக்கின்றது. காலை 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை பிளஸ் 2, பிளஸ் 1 மாணவ மாணவிகள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.
வழிகாட்டி நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக 50க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவன ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்டால்களில் 'அப்ளிகேஷன் முதல் அட்மிஷன்' வரை அனைத்து தகவல்களையும் பெறலாம்.
என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எனும் கேள்விகளோடு காத்திருக்கும் பிளஸ் 2, பிளஸ் 1 மாணவர்களுக்கு இந்த மெகா கல்வித்திருவிழா அரிய வாய்ப்பு. உயர்கல்வி நிறுவனங்களில் அட்மிஷன் நடைபெறுவது எப்படி, வேலை வாய்ப்பை அள்ளித்தரும் துறைகள் எவை என்பது குறித்து இந்நிகழ்ச்சியில் விளக்கப்படும்.
மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் எவை, உதவித்தொகை வாய்ப்புகள் எப்படி என்பது உட்பட அனைத்து வித சந்தேகங்களுக்கும் தீர்வு காணும் வகையில், பல்வேறு அம்சங்களுடன் இந்த வழிகாட்டிநிகழ்ச்சி நடக்கிறது. அனைத்து துறைகள் குறித்து துறை சார்ந்த நிபுணர்கள் நேரடியாக ஆலோசனை வழங்குகின்றனர்.
நுழைவு தேர்வு

நீட் மற்றும் ஜே.இ.இ., போன்ற தேசிய நுழைவுத் தேர்வுகளில் சாதிப்பதற்கான வழிமுறைகள், 'கிளாட், நாட்டா, கேட்'போன்ற நுழைவுத் தேர்வுகளின் முக்கியத்துவம் குறித்தும் விளக்கப்பட உள்ளது.
அனைத்து பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை வாய்ப்புகள், ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - ஐ.சி.டி., எய்ம்ஸ், ஜிப்மர், ஐ.எஸ்.ஐ.,-ஐ.ஐ.எஸ்.இ.ஆர்., போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் சந்தேகம் எழுப்பி தெளிவு பெறலாம்.
இணைந்து வழங்குவோர்
இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் கோவை ராமகிருஷ்ணா எஜூகேஷன் இன்ஸ்டிடியூஷன், அமிர்தா விஷ்வ வித்யா பீடம் பவர்டு பையாக கரம் கோர்த்து வழங்குகின்றன. கோ-பான்சர் - ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி களம் இறங்கியுள்ளது. மேலும் வழிகாட்டி நிகழ்ச்சியை ருசி பால் நிறுவனம், பிக் எப்.எம்.,-92.7, எஸ்.மீடியோ, அக்குவாகிரீன் பேக்கேஜ் டிரிங்கிங் வாட்டர் ஆகியவை இணைந்து வழங்குகின்றன.
அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை அள்ளி தரும் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியை பங்கேற்கும் வாய்ப்பினை மிஸ் பண்ணாதீங்க...
சென்டாக் சந்தேகங்களுக்கு இன்று விளக்கம்

புதுச்சேரியில் உயர் கல்வி சேர்க்கை அமைப்பாக சென்டாக் உள்ளது. மருத்துவம், இன்ஜினியரிங், நர்சிங் என அனைத்து படிப்புகளுக்கும் ஒரே குடையின் கீழ் சென்டாக் மூலமாகவே மாணவர் சேர்க்கை நடந்து வருகின்றது.
உயர் கல்வி தொடர்பான சிந்தனையில் இருக்கும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு சென்டாக்கிற்கு விண்ணப்பிப்பது எப்படி, கவுன்சிலிங் நடைமுறைகள் என்ன, கட் ஆப் மதிப்பெண் என மாணவர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருக்கும். 'தினமலர்' வழிகாட்டியின் இன்றைய காலை அமர்வில் சென்டாக் தொடர்பாக அனைத்து சந்தேகங்களுக்கு கல்வியாளர்களிடம் நேரடியாக விளக்கம் பெறலாம்.
இன்றைய அமர்வில் கல்வியாளர்கள்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாம் நாள் காலை அமர்வில் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பேராசிரியர் வெங்கட்டசுப்பிரமணியன், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் அழகுமூர்த்தி சென்டாக் கவுன்சிலிங் நடைமுறைகள் குறித்தும், புதுச்சேரி மதர் தெரசா இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் பேராசிரியர் ஸ்ரீதேவி துணை மருத்துவ படிப்பு குறித்து விளக்கம் அளிக்கின்றனர். மாலை 3:00 முதல் 5.30 மணி வரை நடக்கும் அமர்வில் கலை அறிவியல் படிப்புகள் குறித்து பேராசிரியர் திருமுருகன், சிறந்த கல்லுாரியை தேர்வு செய்யும் வழிமுறைகள் குறித்து பேராசிரியர் உஷா ஈஸ்வரன் விளக்கம் அளிக்க உள்ளனர்.
பரிசு மழை

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில் அசத்தலான பரிசுகள் காத்திருக்கின்றது. கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களுக்கு லேப்டாப், டேப்லெட், வாட்ச் பரிசாக வழங்கப்பட உள்ளது.
உடனே பதிவு செய்யுங்கள்

தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கில் தினமும் காலை மற்றும் மாலையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. உயர் கல்வி குறித்த உங்களின் சந்தேகங்களுக்கு நேரில் விடை காண www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505-74442 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் உடனே பதிவு செய்யுங்கள்.






      Dinamalar
      Follow us