தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கள்ளக்குறிச்சி, செஞ்சியில் நாளை 'தினமலர்' நடத்தும் வித்யாரம்பம்

கள்ளக்குறிச்சி, செஞ்சியில் நாளை 'தினமலர்' நடத்தும் வித்யாரம்பம்

கள்ளக்குறிச்சி, செஞ்சியில் நாளை 'தினமலர்' நடத்தும் வித்யாரம்பம்


UPDATED : அக் 19, 2026 03:05 PM

ADDED : அக் 19, 2026 03:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 03:05 PM ADDED : அக் 19, 2026 03:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
'தினமலர்' மாணவர் பதிப்பு பட்டம் இதழ் மற்றும் ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி இணைந்து கள்ளக்குறிச்சியிலும், செஞ்சி சிறுகடம்பூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இணைந்து செஞ்சியிலும் குழந்தைகளுக்கான 'அ, ஆ' எழுதும் வித்யாரம்பம் நிகழ்ச்சி நாளை 20ம் தேதி நடக்கிறது.

கல்விச் சாலைக்குள் அடியெடுத்து வைக்க காத்திருக்கும் இளந்தளிர்கள், சரஸ்வதி தேவியின் அருள் பெற, விஜயதசமி திருநாளில், கல்வி கற்க துவங்கும் 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கள்ளக்குறிச்சி யில், ஜே.எஸ்., குளோபல் அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி வளாகத்தி லும்; செஞ்சி, சிறுகடம்பூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்திலும், நாளை 20ம் தேதி காலை 9:00 முதல் 11:00 மணி வரை நடக்கிறது.

கல்வியில் சாதனை படைத்து பல்வேறு துறைகளில் மாவட்டத்தில் சிறந்து விளங்கும் முக்கிய பிரமுகர்கள் மடியில், உங்களது செல்லக் குழந்தைகளை அமர வைத்து பிஞ்சு விரல்களைப் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்கும் சிறந்த தருணமிது.

தங்களது குழந்தைகள் எழுதும் முதல் எழுத்தின் அழகிய தருணத்தை புகைப்படம் எடுத்து, உடனடியாக புகைப்படத்துடன் கூடிய 'தினமலர்' சான்றிதழ் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் கள்ளக்குறிச்சியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஜே.எஸ்., குளோபல் அகாடமி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரி சு வழங்கப்படும்.

அதே போன்று செஞ்சியில் பங்கேற்கும் குழந்தைகளுக்கு செஞ்சி, சிறுகடம்பூர் சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சார்பில் 'ஸ்கூல் கிட்' சிறப்பு பரிசாகவும் வழங்கப்படும்.

கல்விக் கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை முன்பதிவு செய்து அழைத்து வாருங்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும்.

முன்பதிவு அவசியம்

இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுக்குட்பட்ட குழந்தைகளை, வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்கச் செய்யலாம். இதற்கு கள்ளக்குறிச்சிக்கு 98940 09906 என்ற வாட்ஸ் ஆப் எண்ணி லும், செஞ்சியில் பங்கேற்க 95247 81197 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொண்டு குழந்தையின் பெயர், வயது, பெற்றோர் பெயர் மற்றும் முகவரியை குறுஞ்செய்தியாக அனுப்பி, முன்பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us