தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : அக் 19, 2026 03:04 PM

ADDED : அக் 19, 2026 03:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 19, 2026 03:04 PM ADDED : அக் 19, 2026 03:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னூர்:
தொழிலாளர் நல வாரியத்தின் கீழ கல்வி நல திட்ட உதவிகளை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

குன்னூர் தொழிலாளர் அமலாக்கம் உதவி ஆணையர் (பொ) முருகபிரசன்னா வெளியிட்ட அறிக்கை :

நீலகிரி மாவட்டத்தில், தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி, தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆண்டுதோறும் தொழிலாளர் பங்கு 20 ரூபாயும், நிறுவனத்தின் பங்கு 40 ரூபாயும் சேர்த்து ஒரு தொழிலாளிக்கு 60 ரூபாய் வீதம் தொழிலாளர் நல நிதியினை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும். நடப்பு ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியினை வரும் 2027 ஜன., 31க்குள் செலுத்த வேண்டும்.

தொழிலாளர்களை சார்ந்தோருக்கு திருமணம், இயற்கை மற்றும் விபத்து மரணம், தையல் இயந்திரம் உதவி தொகைகள் வழங்கப்படுகின்றன. கல்வி, அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, உயர்கல்வி நுழைவு தேர்வு, மாவட்ட விளையாட்டுகளுக்கு உதவி தொகைகளும் பெறலாம். மாத சம்பளம் 35,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

2026-2027ம் ஆண்டிற்கான கல்வி உதவிதொகை, ஊக்கதொகை மற்றும் பாடநூல் உதவிதொகை திட்டங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்களை www.lwb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள், செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை - 06 என்ற முகவரிக்கு டிச., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்

இவ்வாறு, முருக பிரசன்னா கூறியுள்ளார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us