சிறந்த கல்வி சேவையில் தினமலர் செஞ்சி பேரூராட்சி சேர்மன் பாராட்டு
சிறந்த கல்வி சேவையில் தினமலர் செஞ்சி பேரூராட்சி சேர்மன் பாராட்டு
UPDATED : ஜன 21, 2026 04:43 PM
ADDED : ஜன 21, 2026 04:47 PM

செஞ்சி: புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்வி குழுமம் இணைந்து சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம் இதழ்' 'பதில் சொல்; பரிசு வெல்' வினாடி வினா போட்டி நடத்தியது.
போட்டியில் 266 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 மாணவர்களை 8 குழுக்களாக பிரித்து, 2 சுற்று போட்டி நடந்தது. இதில் 9ம் வகுப்பு மாணவர்கள் பிரகலாதன், செந்தமிழ்வாணன் அணி முதல் இடமும், 9ம் வகுப்பு மாணவிகள் நிவேதா, காயத்ரி அணி இரண்டாம் இடமும் பிடித்தனர்.
இவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு தலைமையாசிரியர் (பொறுப்பு) சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியர் கோமதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் ரமணி வரவேற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும் கேடயம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி பேசுகையில், மாணவர்களின் நலனில் அக்கறையோடு வெளிவரும் 'தினமலர் - பட்டம்' இதழில் ஏராளமான தகவல்கள் உள்ளது. பள்ளி முடித்து அரசு போட்டி தேர்வு எழுதும் போது வெற்றி பெறுவதற்கும் உதவியாக இருக்கும்.
தமிழக மாணவர்கள் பயன்பெறும் வகையில் 'தினமலர்' பட்டம் இதழை வழங்கி சிறந்த கல்வி சேவை செய்து வருகிறது' என்றார்.
ஆசிரியர்கள் ஸ்ரீதிலீப், வேல்விழி, தீனதயாளன், முத்துக்குமரன், செல்வம், ஹேமா மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆசிரியர் யோகசுந்தரம் தொகுத்து வழங்கினார். ஆசிரியர் ஹாஜா பாஷா நன்றி கூறினார்.

