UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 05:37 PM

உடுமலை:
அரசு துவக்கம் முதல் மேல்நிலை பள்ளிகள் வரை, சிறிய மராமத்து பணிகள் மேற்கொள்ளவும், பராமரிப்பு பணிகளுக்கும், கல்வியாண்டு தோறும் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் மானியத்தொகை வழங்கப்படுகிறது.
1 முதல் 30 எண்ணிக்கையிலான மாணவர் எண்ணிக்கைக்கு 10 ஆயிரம் ரூபாயும், 31 முதல் 100 எண்ணிக்கைக்கு 25 ஆயிரமும், அதற்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும், 250 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு 75 ஆயிரம் ரூபாயும் ஒதுக்கப்படுகிறது. பள்ளி மேலாண்மை குழுவின் சார்பில், இரண்டு கட்டங்களாக வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக, 50 சதவீதம் நிதி மட்டுமே அரசு பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் கூறுகையில், பள்ளி மற்றும் பராமரிப்பு மானியத்தில் முதற்கட்ட நிதியும் தாமதமாகவே வந்தது. இரண்டாம் கட்ட நிதி பள்ளி முடிவதற்குள் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம். நிதி வழங்காததால், இதை நம்பி செய்ய வேண்டிய சில பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றனர்.