UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 05:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நேற்று துவங்கியது. வேதியியலில் தவறான கேள்விக்கு, மூன்று மார்க் கருணை மதிப்பெண்ணாக வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள் கடந்த, 22ம் தேதி முடிந்தன. இதையடுத்து, விடைத்தாள்களை மதிப்பிடும் பணி, 83 மையங்களில் நேற்று துவங்கியது. மாநிலம் முழுதும், 30,000த்துக்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள், விடை திருத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விடைக்குறிப்புகள் அரசு தேர்வுத் துறையால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அதில், வேதியியல் பாடத்தில், மூன்று மதிப்பெண்ணுக்கான, 33ம் எண் வினா அம்சங்கள் தவறாக இருந்ததால், அதற்கு பதில் எழுத முயற்சித்தவர்களுக்கு, கருணை மதிப்பெண்ணாக மூன்று மார்க் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.