UPDATED : ஏப் 03, 2024 12:00 AM
ADDED : ஏப் 03, 2024 05:30 PM
தர்மபுரி:
மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கு, மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கிருஷ்ணகிரி அடுத்த, நாட்டாண்மைக்கொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், தர்மபுரி மாவட்ட மருத்துவக் கல்லுாரியில், மாணவர்களுக்கு மஞ்சப்பை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் (பொ) அருணா தலைமை வகித்து பேசினார்.
அதில், மண் மற்றும் மனிதனுக்கும் தீங்கு தரும் பிளாஸ்டிகை தவிர்த்து, இயற்கையை காக்க, மரங்களை வளர்க்க வேண்டும். மேலும், நாம் அனைவரும், மஞ்சப்பைகளை பயன்படுத்தி துாய்மையான தமிழகத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதில், தலைமையாசிரியை மணிமேகலை அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கினார். மருத்துவர் கண்ணன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.