UPDATED : பிப் 02, 2025 12:00 AM
ADDED : பிப் 02, 2025 10:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:
வெளிநாடுகளில் உள்ள தங்களுடைய உறவுகளுக்கு கல்வி, மருத்துவச் செலவுக்காகவும், முதலீடுகளுக்காகவும், இங்கிருந்து பணம் அனுப்பும்போது, அதற்கு வரிப்பிடித்தம் செய்யப்படுகிறது.
இதுவரை, 7 லட்சம் ரூபாயாக இருந்த உச்ச வரம்பு, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஆண்டுக்கு, 10 லட்சம் ரூபாய் வரை அனுப்பினால், அதற்கு வரிப் பிடித்தம் செய்யப்படாது.
மருத்துவ காரணங்களுக்கு, 5 சதவீதம், முதலீடு மற்றும் வெளிநாட்டு பயணத்துக்கு, 20 சதவீதமாக இருந்த வரி விகிதத்தில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
கல்விக்காக பணம் அனுப்பும்போது, அது நிதி நிறுவனங்களில் இருந்து கடனாக பெறப்பட்டிருந்தால், அதற்கு வரிப் பிடித்தம் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.