அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு மாணவிகளுடன் கலந்துரையாடல்
அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு மாணவிகளுடன் கலந்துரையாடல்
UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 10:44 AM

புதுச்சேரி :
காலாப்பட்டு அரசுப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குலோத்துங்கன், மாணவிகளிடம் கலந்துரையாடினார்.
புதுச்சேரியில் உள்ள அரசுப்பள்ளிகளில் கலெக்டர் குலோத்துங்கன் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். மேலும் பள்ளி மாணவ-மாணவியரிடம், பாடங்கள், பொது அறிவு, எதிர்கால லட்சியங்கள் உள்ளிட்டவைகள் குறித்து கலந்துரையாடுகிறார். பள்ளி மாணவர்களும் கலெக்டருடன் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் கேள்விகளுக்கு பதில் அளிக்கின்றனர். இந்த நிலையில் காலாப்பட்டு பகுதி, எம்.ஓ.எச் பாரூக் மரைக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கு அரசு திட்டங்களின் கீழ், பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து துணை முதல்வரிடம் கேட்டறிந்தார். மேலும், பள்ளியின் வகுப்பறைகள் மற்றும் ஆய்வுக்கூடம் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்தார்.
இதைத்தொடர்ந்து, 10 மற்றும், பிளஸ் 1 மாணவிகளுடன் பொது அறிவு, காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பம் அடைதல் குறித்து கலந்து உரையாடினார்.