UPDATED : நவ 08, 2024 12:00 AM
ADDED : நவ 08, 2024 10:00 AM

சிதம்பரம்:
சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் நடத்தப்படும் குழந்தைகள் தினவிழா போட்டிகளில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு, சிதம்பரம் காந்தி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இணைய வழியில் பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. அதில், ஓவிய போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் நேரு படத்தை பென்சிலால் வரைந்து போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும். பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் உயர்நிலை வகுப்பு மாணவர்கள், காந்தியின் வழியில் நேரு என்ற தலைப்பில் பேசி வீடியோ பதிவு செய்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்ப வேண்டும். கட்டுரைப் போட்டியில் பங்கேற்கும் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் காந்தியும் நேருவும் என்ற தலைப்பில் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் கட்டுரை எழுதி போட்டோ எடுத்து அனுப்ப வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் குழந்தைகள் தங்கள் பெயர், தந்தை பெயர், வகுப்பு, பள்ளி, மொபைல் எண் குறிப்பிட்டு, வரும் 12 ம் தேதி மாலை 5:00 மணிக்குள் 9443046295 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு படைப்புகளை அனுப்ப வேண்டும்.