ரீடு நிறுவனத்தின் வெள்ளி விழா: மாணவர்களுடன் கலந்தாய்வு
ரீடு நிறுவனத்தின் வெள்ளி விழா: மாணவர்களுடன் கலந்தாய்வு
UPDATED : செப் 25, 2026 06:18 PM
ADDED : செப் 25, 2026 06:21 PM
சத்தியமங்கலம்:
ரீடு நிறுவனத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தில் ரீடு நிறுவனம் தொடங்கி, 25 ஆண்டுகள் நிறைவடைந்து 26ம் ஆண்டில், சமூக மாற்றத்தில் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்ற பணிகளை செய்து வருகிறது. ஆண்டுதோறும், 100க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கலந்தாய்வு கூட்டத்தின் நோக்கம் குறித்து, ரீடு நிறுவனத்தின் இயக்குனர் கருப்புசாமி தலைமையேற்று பேசினார்.
கலந்தாய்வு கூட்டத்தில், சிறப்பாளர்களாக சத்யா மருத்துவமனை டாக்டர் செந்தில் ராஜ் மற்றும் அரசு பள்ளி இளநிலை உதவியாளர் சுரேஷ் குமார் ஆகியோர் பங்கேற்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வேலை வாய்ப்புகள் குறித்தும் பேசினர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னக்கொடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பட்டம்மாள் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். கலந்தாய்வு கூட்டத்தில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சிறப்பு அழைப்பாளர்களுடன் கலந்துரையாடினர்.
