UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 09:59 AM
சேலம்:
பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கலெக்டர் பிருந்தாதேவி கூறினார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் பிருந்தாதேவி, முதன்மை கல்வி அலுவலர் கபீர் நேற்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் அரசு, அதன் உதவி பெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 1,567ல், 1 முதல், 5ம் வகுப்பு வரை, தமிழ் வழியில், 71,216 பேர், ஆங்கில வழியில், 36,824 பேர் படிக்கின்றனர். தமிழ் வழியில் படிப்போருக்கு, 1,17,252 புத்தகங்கள், ஆங்கில வழியில், 27,161 புத்தகங்கள், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள, அரசு, அதன் உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், 350ல், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழியில், 89,593 பேர், ஆங்கில வழியில், 49,559 பேர் படிக்கின்றனர்.
இவர்களுக்கு தமிழ் வழியில், 6,26,612 புத்தகங்கள், ஆங்கில வழியில், 3,02,972 புத்தகங்கள் பெறப்பட்டுள்ளன. அனைத்து பள்ளிகளிலும், பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவியருக்கு, பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகள் தயார் நிலையில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, ஆய்வு நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.