UPDATED : ஜூன் 05, 2024 12:00 AM
ADDED : ஜூன் 05, 2024 10:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி :
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில், இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து மாணவர் இளைஞர் மாவட்ட பயிற்சி வகுப்பு நடத்தியது.
மாணவர் சங்க மாநில தலைவர் சம்சீர் முகமது தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பவித்ரன், மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் சிலம்பரசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் சங்க செயலாளர் குப்பன் வரவேற்றார்.
மாநாட்டில், அரசு பள்ளி, கல்லுாரிகளில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். நீட் தேர்வு மற்றும் புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும். கல்வி நிலையங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தடுக்க வலியுறுத்தி, பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.