தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்

கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கல்


UPDATED : ஜூன் 27, 2026 11:41 AM

ADDED : ஜூன் 27, 2026 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 11:41 AM ADDED : ஜூன் 27, 2026 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்:
உல்லாஸ் திட்டத்தின் மூலமாக கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

பள்ளிப் படிப்பை தவறவிட்ட வயது வந்தோர்களுக்கு, கல்வி அளிக்கும் வகையில் மத்திய அரசு 'உல்லாஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, புதுச்சேரியில் பள்ளி கல்வி இயக்ககம் மூலமாக, இத்திட்டத்தின் கீழ், 15 வயதிற்கு மேற்பட்ட கல்வி கற்காதவர்கள் அனைவருக்கும் தன்னார்வ ஆசிரியர்களை கொண்டு எண்ணறிவு, எழுத்தறிவோடு, மொபைல்போன் மூலம் பணம் பரிமாற்றம் செய்தல், ஏ.டி.எம்.டி., கார்டு பயன்படுத்துதல், சட்ட அறிவு, படிவங்களை பூர்த்தி செய்தல், சுகாதார கல்வி உள்ளிட்ட தேவையான வாழ்க்கை திறன்கள் கற்பிக்கப்பட்டன.

அதன்படி, பாகூர் பேட் அரசு தொடக்கப்பள்ளி மூலமாக கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளி துணை ஆய்வாளர் வாஞ்சிநாதன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், மற்றும் பள்ளி தலைமையாசிரியர் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us