தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ரூ.20 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்ப மையம் அமைக்க ஆயத்தம்; மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பு

ரூ.20 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்ப மையம் அமைக்க ஆயத்தம்; மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பு

ரூ.20 கோடியில் ஏ.ஐ., தொழில்நுட்ப மையம் அமைக்க ஆயத்தம்; மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பட வாய்ப்பு


UPDATED : ஜூன் 27, 2026 11:39 AM

ADDED : ஜூன் 27, 2026 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 27, 2026 11:39 AM ADDED : ஜூன் 27, 2026 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில், ரூ.20 கோடியில், செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம் அமைப்பதற்கான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

புதுச்சேரி மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அரசு நிர்வாகத்தை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு சிறப்பு மையம், 20 கோடி ரூபாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை ஐ.டி., துறை துவக்கியுள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதியை, மத்திய அரசு 40; புதுச்சேரி அரசு 40; மற்றும் தனியார் நிறுவனம் 20; சதவீதம் என ஏற்க உள்ளன.

இதன் மூலம் சுகாதாரம், விவசாயம், சுற்றுலா, கல்வி மற்றும் ஸ்மார்ட் நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு மூலம் பிரச்னைகளுக்கு தீர்வுகள் கண்டறியப்பட உள்ளன.

வேளாண்மை துறை இத்துறையில் புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களில் பின்பற்றப்படும் 'கிராப் பேட்டன்' எனப்படும் பயிர் முறைகளை செயற்கை நுண்ணறிவு அமைப்பு உருவாக்க உள்ளது. இது பயிரின் தரம் மற்றும் அளவை, அதிலிருந்து கிடைக்கும் வருவாயுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்யும்.

விவசாயிகளின் மனநிலை கடந்த கால பயிர் முறைகள், விளைச்சல் பெற்ற பயன்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒவ்வொரு விவசாயியின் மனநிலையை இந்த ஏ.ஐ., அமைப்பு கண்காணிக்கும்.

விதைக்கும் நேரம் மற்றும் உள்ளூர் வானிலை நிலவரங்களை கருத்தில் கொண்டு, ஒரு விவசாயி, பயிரிடும் பயிரின் விளைச்சலை முன்கூட்டியே கணிக்க இந்த அமைப்பு புத்திசாலித்தனமாகச் செயல்படும்.

நிலத்தை உழுதல், விதை விதைத்தல், தண்ணீர் பாய்ச்சுதல், பூச்சிக்கொல்லி தெளித்தல் மற்றும் அறுவடை செய்யும் நேரங்களில், இந்த ஏ.ஜ., அமைப்பு விவசாயிகளுக்கு ஒரு அறிவுசார் உதவியாளராகச் செயல்படும்.

சுற்றுலா துறை புதுச்சேரியின் சுற்றுலா தலங்களின் மெய்நிகர் சூழலை உருவாக்க, சுற்றுலா தலங்களை சுற்றியுள்ள கடைகள், சிற்றுண்டி சாலைகள் மற்றும் பிற வசதிகள் குறித்து ஏ.ஐ., அமைப்பு தகவல்களை சேகரிக்கும்.

பயணிகளின் அடிப்படைத் தகவல்களின் அடிப்படையில் டிக்கெட் முன்பதிவு, அறை முன்பதிவு மற்றும் பிற வசதிகளை பெறுதல் போன்ற தனிப்பயனாக்கப்பட்ட சேவைகள் இதன் கூடுதல் சிறப்பு. அதற்கே சுற்றுலா பயணிகளுக்கான கையேடு உருவாக்கப்படும்.

கல்வித்துறை மாணவர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் திறன் தேவைகளை கண்டறிந்து, அவர்களுக்குத் தேவையான குறுகிய மற்றும் நீண்ட கால பயிற்சிகளை ஏ.ஐ., அமைப்பு பரிந்துரைக்கும்.

தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஏ.ஐ., ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டு, மேம்பட்ட ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

நகர்ப்புற மேம்பாட்டுத்துறை போக்குவரத்து நெரிசலை கணக்கிட்டு, அவசர கால வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் வசதிக்கேற்ப சிக்னல் நேரத்தை தானாகவே மாற்றும் வசதி செய்யப்படும்.

பஸ் ஸ்டாண்டுகளில் ஸ்மார்ட் அமைப்புகள் மூலம், பஸ் இருப்பிடம் மற்றும் அது வந்து சேரும் நேரத்தை துல்லியமாக கணக்கிட்டு பயணிகளுக்கு தெரிவிக்கப்படும்.

சி.சி.டி.வி., கேமராக்கள் மூலம் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வாகன நடமாட்டத்தை கண்காணிக்கும். தொடர்ந்து பாதுகாப்பான மற்றும் ஆபத்தான பகுதிகளை கண்டறியும்.

இப்படி, புதுச்சேரியைத் தொழில்நுட்பத் தலைநகராக மாற்றும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்முயற்சி, உள்ளூர் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை சீரான பாதையில் எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us