அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கல்
UPDATED : ஆக 13, 2024 12:00 AM
ADDED : ஆக 13, 2024 08:25 AM
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி அடுத்த சிந்தாமணி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியை சுசீலா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிதுரை, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வம் வரவேற்றார்.
விக்கிரவாண்டி ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கி பேசினார். கல்விக்குழு இளவரசன், எழிலதிபன், சக்திவேல், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.
இதே போன்று பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை எழிலரசி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜாம்பாள், ஊராட்சி தலைவர்கள் பூவராகவன், சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் சண்முகம் வரவேற்றார்.
தொரவி தொழிலதிபர் சுப்ரமணி பள்ளி மாணவர்களுக்கு தினமலர் - பட்டம் இதழை வழங்கி பேசினார். சிலம்பம் குழு ஒருங்கிணைப்பாளர்கள் முத்து ஏழுமலை, முத்துக்குமரன், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.