UPDATED : ஆக 02, 2024 12:00 AM
ADDED : ஆக 02, 2024 10:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:
பிளஸ் 2 மாணவ, -மாணவியருக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் நேற்று வினியோகம் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் வழங்கினர். ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியை சுகந்தி, வழங்கினார்.
பள்ளிக்கல்வித்துறையினர் கூறியதாவது:
பள்ளிகள் வாயிலாக எழுதியவர்களுக்கு, அந்தந்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்களாக எழுதியவர்களுக்கு, தேர்வெழுதிய மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கூறினர்.