தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ வரும் 24ல் சென்னையில் மாவட்ட கலை போட்டிகள்

வரும் 24ல் சென்னையில் மாவட்ட கலை போட்டிகள்

வரும் 24ல் சென்னையில் மாவட்ட கலை போட்டிகள்


UPDATED : ஆக 20, 2024 12:00 AM

ADDED : ஆக 20, 2024 09:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2024 12:00 AM ADDED : ஆக 20, 2024 09:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சென்னை மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான கலைப் போட்டிகள், வரும் 24ம் தேதி நடக்க உள்ளன.

இதில் 5 முதல் 8; 9 முதல் 12; 13 முதல் 16 என, மூன்று வகை வயது பிரிவில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைப் போட்டிகள், ராஜா அண்ணாமலைபுரம், டி.ஜி.எஸ்., தினகரன் சாலையிலுள்ள தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில் நடக்க உள்ளன.

காலை 9:00 மணிக்கு முன்பதிவு நடக்கும். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவியர் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விபரங்களுடன், வயது சான்றிதழ் கொண்டுவர வேண்டும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 044 - 28192152 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us