UPDATED : ஆக 20, 2024 12:00 AM
ADDED : ஆக 20, 2024 09:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:
டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சி அலுவலராக கரூர் மாவட்ட த்தில் பொறுப்பேற்றுள்ள, உதவி இயக்குனர் விஜய் (ஊராட்சிகள்) நேற்று, கரூர் மாவட்ட மைய நூலகத்துக்கு வருகை தந்தார்.
பிறகு, மாவட்ட மைய நூலகத்தை சுற்றி பார் த்த உதவி இயக்குனர் விஜய், போட்டி தேர்வு களுக்கு பயிற்சி பெற்று வரும், மாணவ, மாணவியர்களை சந்தித்து, போட்டி தேர்வுக்கு படிக்கும் முறைகள், பல்வேறு மாதிரி தேர்வு எழுது தல், எளிய முறையில் கற்பது மற்றும் தவறுகளை திருத்தி கொள்வது என, வழி முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.