UPDATED : ஏப் 08, 2026 05:47 PM
ADDED : ஏப் 08, 2026 05:49 PM

அ நிறம் | அளவு
திருப்பூர்:
திருப்பூர், வஞ்சிபாளையத்தில் உள்ள துளிர் பப்ளிக் பள்ளியில், மாவட்ட அளவிலான தடகள போட்டி நடத்தப்பட்டது.
இதில், திருப்பூர், பிரைட் பப்ளிக் பள்ளி மாணவ, மாணவியர், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, 36 தங்கம், 32 வெள்ளி மற்றும் 10 வெண்கல பதக்கம் வென்று, ஒட்டு மொத்த புள்ளியில் இரண்டாமிடம் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
ஆறு மாணவ, மாணவியர் தனி நபர் கோப்பையை வென்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை 'அன்பு' அறக்கட்டளை பொருளாளர் பாலசுப்ரமணியம், பள்ளியின் துணை முதல்வர் திலகவதி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜம்பு, ராஜா ஆகியோர் பாராட்டினர்.
