தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரவக்குறிச்சி அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு

அரவக்குறிச்சி அரசு பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு


UPDATED : மார் 14, 2026 12:00 PM

ADDED : மார் 14, 2026 12:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2026 12:00 PM ADDED : மார் 14, 2026 12:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி:
அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தை மாவட்ட கல்வி அலுவலர் ஆய்வு செய்தார்.

அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தமிழக அரசின் உத்தரவின்படி மாணவர்களுக்கு சிறந்த முறையில், கணினி பயிற்சி வழங்குவதற்காக உயர் தொழில்நுட்ப ஆய்வகம், முதல் கட்டத்திலேயே அமைக்கப்பட்டது. டி.என்., ஸ்பார்க் எனப்படும் கணினி பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கணினி அடிப்படை டக்ஸ் டைப்பிங், சாட் ஜி.பி.டி., அனிமேஷன் ஏ.ஐ., தொழில்நுட்பம், எச்.டி.எம்.எல்., போன்ற பல்வேறு பயிற்சி மற்றும் இணையதள வழியாக பயிற்சி, தேர்வு நடத்தப்படுகிறது. இதனை மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி) சண்முகவேல் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது, மாணவர்களின் சிறப்பான செயல்பாடுகளை பாராட்டினார். சமூக ஊடகங்களின் நன்மைகளையும், தீமைகளையும் அதில் தாங்கள் தற்காத்து கொள்ள வேண்டிய அறிவுரைகளையும் வழங்கினார்.

மேலும் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறிவு தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் எதிர்வரும் மூன்றாம் வகுப்பிற்கு நடக்கக்கூடிய எப்.எல்.எஸ்., தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வட்டார கல்வி அலுவலர் சகுந்தலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்ச்செல்வி, தலைமை ஆசிரியர் சாகுல் அமீது மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us