sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாவட்ட அளவில் கலைப்போட்டி 6ம் தேதி தொடக்கம்: கலெக்டர்

/

மாவட்ட அளவில் கலைப்போட்டி 6ம் தேதி தொடக்கம்: கலெக்டர்

மாவட்ட அளவில் கலைப்போட்டி 6ம் தேதி தொடக்கம்: கலெக்டர்

மாவட்ட அளவில் கலைப்போட்டி 6ம் தேதி தொடக்கம்: கலெக்டர்


UPDATED : அக் 03, 2024 12:00 AM

ADDED : அக் 03, 2024 08:19 AM

Google News

UPDATED : அக் 03, 2024 12:00 AM ADDED : அக் 03, 2024 08:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
நாமக்கல் நகரவை உயர்நிலைப்பள்ளியில், கலை பண்பாட்டுத்துறை சார்பில், வரும், 6ல், மாவட்ட அளவிலான கலைப்போட்டி நடக்கிறது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தற்போதைய நிதியாண்டில், 5-8, 9-12, 13-16 வயது சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப்பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. மாவட்ட அளவில் போட்டியில், 9-12, 13-16 வயது பிரிவில், முதல் பரிசு பெறும் மாணவர், மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். அதில், வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பரிசு தொகை, சான்றிதழ் வழங்கப்படும்.

மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டி நடத்தி அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பாராட்டுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில், வரும், 6ல், மாவட்ட அளவிலான கலைப்போட்டி நடக்கிறது. காலை, 9:15 மணிக்கு முன்பதிவு துவங்குகிறது. குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியப்போட்டிகள் நடக்கின்றன.

குரலிசை போட்டியில், கர்நாடக இசை பாடல்கள், தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புற பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். மேற்கத்திய இசை, திரைப்பட பாடல்கள், பிற மொழி பாடல்கள், குழுப்பாடல்களுக்கு அனுமதியில்லை. கிராமிய நடன போட்டியில், தமிழகத்தின் மாண்பை வெளிப்படுத்தும் கிராமிய நாடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் (கிராமிய இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை.

பரதநாட்டியம் போட்டியில், பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்கள் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்பட பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் தவிர்த்து) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்களுக்கு அனுமதியில்லை.

ஓவிய போட்டியில், 40x30 செ.மீ., அளவுள்ள ஓவிய தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், ஆயில் கலர் பெயின்டிங் என, எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். விபரங்களுக்கு, சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை, 0427-2386197, 9944457244 ஆகிய தொலைபேசி, மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us