தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரிகளுக்கு இடையிலான மாவட்ட லீக் கிரிக்கெட் போட்டி

கல்லுாரிகளுக்கு இடையிலான மாவட்ட லீக் கிரிக்கெட் போட்டி

கல்லுாரிகளுக்கு இடையிலான மாவட்ட லீக் கிரிக்கெட் போட்டி


UPDATED : மார் 05, 2026 02:41 PM

ADDED : மார் 05, 2026 02:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 02:41 PM ADDED : மார் 05, 2026 02:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம், சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பில் கல்லுாரிகளுக்கு இடையே மாவட்ட அளவில் 25 ஓவர் கிரிக்கெட் லீக் போட்டிகள் ஆர்.வி.எஸ்., பி.எஸ்.என்.ஏ., ஸ்ரீவி., கல்லுாரி மைதானங்களில் நடந்தது.

சின்னாளபட்டி காந்திகிராம கிராமிய பல்கலை (ஜி.ஆர்.ஐ.,) அணி 25 ஓவர்களில் 162/6 ரன்கள் (நிர்மல்லேஸ்வர் 29, திருமுகன் 36, கவுதம் 37) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பார்வதீஸ் கலை, அறிவியல் கல்லுாரி அணி 20.4 ஓவர்களில் 91 ரன்கள் (கவுதம் செல்வமுருகன் 3/12) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.

நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 204/8 ரன்கள் (பரமேஸ் 41, விக்னேஷ்வரன் 34, பூபதி 53, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய கூடலுார் கொங்குநாடு பாலிடெக்னிக் கல்லுாரி அணி 14.1 ஓவர்களில் 48 ரன்கள் (சின்னையா 4/10, மதிசெல்வம் 4/4) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.

திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி அணி 25 ஓவர்களில் 241/3 ரன்கள் (சங்கர் 31, விஷ்ணுகார்த்திக் 54, நாட் அவுட், நந்தகுமார் 101) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் எஸ்.பி.எம்., பாலிடெக்னிக் கல்லுாரி அணி 15.2 ஓவர்களில் 35 ரன்கள் (கமல் 3/4, பொன்மோகன் 3/5) எடுத்து 'ஆல் அவுட்' ஆகி தோல்வி அடைந்தது.

பழநி ஏ.பி.ஏ., கலை, அறிவியல் கல்லுாரி அணி 16.3 ஓவர்களில் 56 ரன்கள் (தர்ஷன் 3/18, விமல்குமார் 3/7) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் பொறியியல் கல்லுாரி (அண்ணா பல்கலை) அணி 11.4 ஓவர்களில் 57/6 ரன்கள் (ஹரீஸ் கேசவன் 32, திருப்பதி 3/12 எடுத்து வெற்றி பெற்றது.

திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., கல்விக் குழும அணி 23.3 ஓவர்களில் 97 ரன்கள் (சவுந்தரராஜ பெருமாள் 29, கிஷோர்குமார் 3/19, சபரிநாதன் 4/3) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது.

எதிர்த்து விளையாடிய ஜி.டி.என்., கல்விக் குழும அணி 13 ஓவர்களில் 101/4 ரன்கள் (பணப்பாண்டி 28, மணி 26, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.

ஆத்துார் அரசு கூட்டுறவுத்துறை கலை, அறிவியல் கல்லுாரி அணி 19 ஓவர்களில் 92 ரன்கள் வேல்முருகன் 3/10) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்., கலை, அறிவியல் கல்லுாரி அணி 24.3 ஓவர்களில் 93/9 ரன்கள் (மாரிமுத்து 25, விமல் 3/20) எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us