தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மென்திறன் மேம்பாட்டு பயிற்சி

மென்திறன் மேம்பாட்டு பயிற்சி

மென்திறன் மேம்பாட்டு பயிற்சி


UPDATED : மார் 05, 2026 02:37 PM

ADDED : மார் 05, 2026 02:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 02:37 PM ADDED : மார் 05, 2026 02:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி:
பெரியார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறையில், 2 நாள் தேசிய அளவிலான மென்திறன் மேம்பாடு பயிற்சி நேற்று நடந்தது.

தர்மபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய ஆங்கிலத் துறை சார்பில், 2 நாள் தேசிய அளவிலான மென்திறன் பயிற்சி மேம்பாட்டு நிகழ்வு, இலக்கியத்தில் இருந்து தலைமை பண்பு என்ற தலைப்பில் நடந்தது. ஆங்கிலத் துறை தலைவர் கோவிந்தராஜ் துவக்க உரையாற்றினார். ஆராய்ச்சி மைய இயக்குனர் செல்வபாண்டியன் தலைமை உரையாற்றினார்.

இதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த மென்திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் லாவண்யா உரையாற்றினார். அதை தொடர்ந்து, வேலைக்கான நேர்காணல் மற்றும் குழு விவாதங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்ளும் போது, மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். கவுரவ விரிவுரையாளர் சரண்யா நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us