மாவட்ட நுாலகம் சுற்றுச்சுவர்சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
மாவட்ட நுாலகம் சுற்றுச்சுவர்சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்
UPDATED : மார் 31, 2024 12:00 AM
ADDED : மார் 31, 2024 09:43 AM
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்ட நுாலகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளாகி சேதமடைந்துள்ளதால் அதன் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. விரைவில் சீரமைக்க வேண்டும்.
ராமநாதபுரம் மாவட்ட நுாலகம் பட்டணம்காத்தான் டி-பிளாக்கில் 1991 ல் துவங்கப்பட்டது. இதன் கீழ் பரமக்குடி, ராமேஸ்வரம் உட்பட மாவட்டத்தில் மைய நுாலகம், கிளை நுாலகம் என மொத்தம் 88 நுாலகங்கள் செயல்படுகின்றன. இங்கு ஒரு லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்து போட்டித்தேர்வுக்கு தயராகும் மாணவர்கள், வாசகர்கள் வருகின்றனர். இந்நிலையில் நுாலக வளாகம் பராமரிக்கப்படாமல் பின்புறத்தில் செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.
நுாலகம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகளான நிலையில் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளதால் நுாலகத்தின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. எனவே சுற்றுச்சுவரை சீரமைக்க வேண்டும். புதர்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.