தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழலையர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

மழலையர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

மழலையர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்


UPDATED : நவ 10, 2026 01:13 PM

ADDED : நவ 10, 2026 01:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 01:13 PM ADDED : நவ 10, 2026 01:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி:
ஊட்டி கிரசன்ட் பள்ளியில் தீபாவளி கொண்டாடப்பட்டது. ஊட்டி கிரசன்ட் பள்ளியில் தீபாவளி பண்டிகையை ஒட்டி, மாணவ, மாணவிகள் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பசுமை தீபாவளி கொண்டாட வலியுறுத்தப்பட்டது.

காற்றில் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு மற்றும் அதிகப்படியான சப்தத்தை தவிர்க்கும் பொருட்டு, பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது என்ற உறுதி மொழி எடுக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், இயற்கையோடு இணைந்த தீபாவளியை கொண்டாட வேண்டிய அவசியம் ஆசிரியர்கள் பேசினர். தொடர்ந்து, அகல் விளக்ககளை ஏற்றி, வண்ணமயமான கோலங்கள் இட்டும், இனிப்புகளை பகிர்ந்து கொண்டு பாரம்பரிய முறைப்படி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
அதில், விளங்கு போல சிறுவர், சிறுமியர் அமர்ந்து நடத்திய கலை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை, பள்ளி தாளாளர் உமர் பாரூக், ஆசிரியைகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us