பட்டு வாரிய விஞ்ஞானி பதவிக்கு சங்ககிரி முதுநிலை பட்டதாரி தேர்வு
பட்டு வாரிய விஞ்ஞானி பதவிக்கு சங்ககிரி முதுநிலை பட்டதாரி தேர்வு
UPDATED : நவ 10, 2026 01:12 PM
ADDED : நவ 10, 2026 01:13 PM
சங்ககிரி:
சங்ககிரி, வி.என்.பாளையத்தை சேர்ந்த முதுநிலை பட்டதாரி, மத்திய அரசின் பட்டு வாரியம் நடத்திய தேசிய அளவிலான தேர்வில் விஞ்ஞானி பதவிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
சங்ககிரி, வி.என்.பாளையத்தை சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் மவுலிதர்ஷன், 26. இவர் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும், மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டுபுழு வளர்ப்பு குறித்து 2019 - 23 வரை இளங்கலை பட்டமும், 2023 - 25 வரை முதுநிலை பட்டமும் பெற்றுள்ளார்.
கடந்த 2025ம் ஆண்டு மத்திய பட்டு வாரியம், காலியாக உள்ள கூட்டு புழுவுக்கு முந்தைய வளர்ப்பான பட்டுப்புழு வளர்ப்பு குறித்த விஞ்ஞானிகள் பதவிக்கு, 18 இடங்களுக்கு தேர்வு நடத்தியது.
அதில், 232 பேர் எழுதினர். தேர்வு முடிவுகள் கடந்த, 2ல், வெளியிடப்பட்டது. அதில் மவுலிதர்ஷன், இந்திய அளவில் விஞ்ஞானி - பி. பிரிவுக்கு தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற அவரை ஊர் மக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
