தி.கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரி 21வது பட்டமளிப்பு விழா
தி.கோடு கே.எஸ்.ஆர்., இன்ஜி., கல்லுாரி 21வது பட்டமளிப்பு விழா
UPDATED : செப் 13, 2026 01:03 PM
ADDED : செப் 13, 2026 01:05 PM
திருச்செங்கோடு:
திருச்செங்கோடு கே.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி, 21வது பட்டமளிப்பு விழாவை, கே.எஸ்.ஆர்., கல்வி நிறுவனங்களின் சேர்மன் சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
கல்லுாரி டீன் வெங்கடேசன் வரவேற்றார். சென்னையை சேர்ந்த ராக்கெட் இந்தியா நிறுவனத்தின் ஏ.ஐ., இன்னொவேஷன் தொழில்நுட்ப பிரிவு தலைவர் மோஹன்பாபு பாலச்சந்திரன், 11 தங்கப்பதக்கம், 2 வெள்ளி பதக்கங்கள் உள்பட, மொத்தம், 850 மாணவ, மாணவியருக்கு பட்டச்சான்று வழங்கி பேசினார்.
அப்போது, “ஒருவர் மேற்கொள்ளும் எந்த பணியிலும், 100 சதவீதம் அர்ப்பணிப்புடன் செயல்படுவது மிகவும் அவசியம். வேகமாக மாறிவரும் தொழில்துறை சூழலை கவனிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொழில்களின் செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்தியா எதிர்காலத்தில் உலகளாவிய திறமையாளர்களின் முக்கிய மையமாக உருவெடுக்க உள்ளது,” என்றார். கல்லுாரி முதல்வர் மீனாட்சி தேவி, பட்டமளிப்பு விழா உறுதிமொழி வாசித்தார். கல்லுாரியின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சத்தியசேகர், இயக்குனர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் வாழ்த்தி பேசினர்.
