UPDATED : செப் 13, 2026 01:02 PM
ADDED : செப் 13, 2026 01:03 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலையில், ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது. காஞ்சிபுரம் ஏனாத்துாரில் உள்ள சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வ மஹா வித்யாலயா பல்கலை, கல்வித்துறை சார்பில் நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், முதல்வர் வெங்கட்ரமணன் வரவேற்றார்.
பல்கலை துணைவேந்தர் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தார். பல்கலை சார்பு துணைவேந்தர் வசந்த்குமார் மேத்தா, இன்றைய கல்வி சூழலில், ஆசிரியர்கள் புதுமையான கற்பித்தல் முறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆடிட்டர் சேகர், ‛ஆசிரியர்களின் சமூகப் பங்கு மற்றும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சியில் ஆசிரியர்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்க உரையாற்றினார். கல்வியியல் துறை தலைவர் ஜெயப்ரியா நன்றி கூறினார்.
