கீழடி ஆய்வு முடிவை வெளியிட வலியுறுத்தி தி.மு.க., மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம்
கீழடி ஆய்வு முடிவை வெளியிட வலியுறுத்தி தி.மு.க., மாணவரணி இன்று ஆர்ப்பாட்டம்
UPDATED : ஜூன் 19, 2025 12:00 AM
ADDED : ஜூன் 19, 2025 10:46 AM
மதுரை:
மத்திய அரசு மேற்கொண்ட கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி தி.மு.க., மாணவரணி சார்பில் மதுரையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில செயலாளர் ராஜிவ்காந்தி தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
கீழடி அகழாய்வில் தமிழகத்தின் வரலாறு,தொன்மம், எழுத்து வடிவம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை கீழடியில் 9 கட்ட ஆய்வுகள் நடந்துள்ளது. தமிழக அரசு மேற்கொண்ட ஆய்வின்முடிவுகள் அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு,உலகின் மூத்த மொழி தமிழ் என்பதற்கான ஆதாரத்தை தந்துள்ளது.
மத்திய அரசின் இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட முதல் மூன்று கட்ட ஆய்வு முடிகளை வெளியிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டும், தற்போது வரை வெளியிடவில்லை. இதனை கண்டித்து மதுரை விரகனுார் சுற்றுச்சாலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, மாவட்ட செயலாளர்கள், மாணவரணி உறுப்பினர்கள், தமிழ் மாணவர் மன்றத்தை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொள்வர் என்றார்.

