sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விகாஸ் இன்ஜின் சோதனை; வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை!

விகாஸ் இன்ஜின் சோதனை; வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை!

விகாஸ் இன்ஜின் சோதனை; வெற்றிகரமாக நிகழ்த்தி இஸ்ரோ சாதனை!


UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM

ADDED : ஜூன் 18, 2025 04:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2025 12:00 AM ADDED : ஜூன் 18, 2025 04:22 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில், மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பயன்படும் விகாஸ் இன்ஜினின் சோதனை 17 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. வீரர்களை அனுப்புவதற்கு முன்னேற்பாடாக, பல்வேறு கட்டங்களில் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

மகேந்திரகிரி இஸ்ரோ மையம், விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டுகளின் இன்ஜின்கள், குறிப்பாக விகாஸ் இன்ஜின்கள் மற்றும் கிரையோஜெனிக் இன்ஜின்கள் தொடர்பான பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜூன் 18) ககன்யான் திட்டத்தில் பயன்படும் விகாஸ் இன்ஜினின் சோதனை 17 வினாடிகளுக்கு வெற்றிகரமாக நடந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றதை, இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

இந்த வெற்றி, எதிர்கால விண்வெளிப் பயணங்களுக்கும், குறிப்பாக இந்தியாவின் மனித விண்வெளிப் பயண திட்டமான ககன்யானுக்கும் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. விகாஸ் இன்ஜின், இஸ்ரோவின் PSLV மற்றும் GSLV ராக்கெட்டுகளின் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய திரவ உந்து சக்தி இன்ஜின் ஆகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us