UPDATED : செப் 13, 2024 12:00 AM
ADDED : செப் 13, 2024 09:27 AM
சென்னை:
சென்னை, போரூர் ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், உலக இயன்முறை சிகிச்சை தின நிகழ்ச்சி, நடந்தது.
நிகழ்ச்சியில், டில்லி வெங்கடேஷ்வரா மருத்துவமனையின் முதுநிலை இயன்முறை டாக்டர் ராஜு பராசர் பேசியதவாது:
உங்களுக்கு கீழ் முதுகில், 48 மணி நேரத்திற்கு மேல் வலி இருந்தால், டாக்டரை ஆலோசிக்க வேண்டும். நீங்களாகவே சிகிச்சை பெறுவது கூடாது. அதேபோல், நடமாடுவதை தவிர்த்து ஓய்வெடுக்கக்கூடாது. அவை, பாதகமாக அமைந்து விடும்.
கீழ் முதுகு வலி என்பது நரம்புகள், தசைகள், எலும்பு மூட்டுகள் சார்ந்த பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வலிக்கு நிவாரணம் கொடுப்பதில், மூளையும் பெரும் பங்கு வகிக்கிறது.
எனவே, 20 நிமிடத்திற்கு மேல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருப்பதையோ, உட்கார்ந்து இருப்பதையோ தவிர்க்க வேண்டும். உட்கார்ந்து இருப்பவர்கள், 20 நிமிடத்திற்குள் சிறிது நேரம் நிற்கலாம். நின்று கொண்டிருப்பவர்களும், சிறிது நேரம் உட்கார்ந்து, தங்களது செயல்பாடுகளில் மாற்றி கொள்வது அவசியம். விளையாட்டில் ஈடுபட்டாலும், அதற்கான உடல் பராமரிப்பு இருப்பது அவசியம்.