UPDATED : ஏப் 17, 2025 12:00 AM
ADDED : ஏப் 17, 2025 12:07 PM
புதுச்சேரி :
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வெள்ளி விழா வளாகத்தில் அமைந்துள்ள மனிதவியல் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில், இந்தியன் வங்கி சி.எஸ்.ஆர்., திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் செலவில் ஒரு மணி நேரத்திற்கு 250 லிட்டர் திறனுடைய சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.
பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார். இதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும்.
நிகழ்ச்சியில், இந்தியன் வங்கி துணை பொது மேலாளர் வெங்கட் சுப்ரமணியன், துணை மண்டல மேலாளர் சுப்ரமணி, இந்தியன் வங்கியின் புதுச்சேரி பல்கலைக் கழகக் கிளை மேலாளர் விஸ்வஜித் உட்பட பலர் பங்கேற்றனர்.