UPDATED : ஆக 03, 2026 03:04 PM
ADDED : ஆக 03, 2026 03:05 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி:
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில், போதைப் பொருள் இல்லா இளைஞர்கள், வளர்ச்சியடைந்த இந்தியா இயக்கம் துவக்க நிகழ்ச்சி கலெக்டர் வளாகத்தில் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நேற்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி, இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பது குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குதில், இளைஞர்களின் பங்களிப்பு குறித்து பேசினார்.
கலெக்டர் குலோத்துங்கன், மைபாரத் தன்னார்வலர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் பிரதமரின் உரையை வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக கேட்டனர். விழிப்புணர்வு குறும்படம் மற்றும் நுகட் நடக் நிகழ்ச்சியும் நடந்தது.
