sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருந்து ஆராய்ச்சி தீவிரம்! வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தகவல்

/

மருந்து ஆராய்ச்சி தீவிரம்! வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தகவல்

மருந்து ஆராய்ச்சி தீவிரம்! வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தகவல்

மருந்து ஆராய்ச்சி தீவிரம்! வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தகவல்


UPDATED : ஏப் 08, 2025 12:00 AM

ADDED : ஏப் 08, 2025 07:50 AM

Google News

UPDATED : ஏப் 08, 2025 12:00 AM ADDED : ஏப் 08, 2025 07:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி:
வேப்ப மரத்தில் இருந்து கிடைக்கும் அசாடிராக்டின் மருந்தாக தயாரித்து வேர் வாயிலாக கொடுத்து, தென்னையில் வெள்ளை ஈயை கட்டுப்படுத்தஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகிறது என வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடியில், தமிழ்நாடு வேளாண் பல்கலை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில், தென்னையில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ மேலாண்மை குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி வரவேற்றார்.

துணை இயக்குனர் சித்தார்த்தன், பெங்களூரு தேசிய வேளாண் பூச்சி வளங்கள் பணியகம் முனைவர் செல்வராஜ், வேளாண் பல்கலை பூச்சியியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முருகன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் அழகுமலை, ஆராய்ச்சி இயக்குநர் ரவீந்திரன் மற்றும் பலர் பங்கேற்று பேசினர். பூச்சியியல் துறை துணை பேராசிரியர் அழகர் நன்றி கூறினார்.

வேளாண் பல்கலை பயிர் பாதுகாப்பு மையம் இயக்குனர் முனைவர் சாந்தி கூறியதாவது:

வெள்ளை ஈ, தாய் பூச்சிகளை கவர்ந்து இழுக்க மஞ்சள் நிற பாலித்தீன் தாள்களில்,15 நாட்களுக்கு ஒருமுறை விளக்கெண்ணை அல்லது பயன்படுத்திய ஆயிலை தடவ வேண்டும்.

ஊடுபயிராக சாகுபடி செய்த வாழை மரங்களில், என்கார்சியா போன்ற இயற்கை ஒட்டுண்ணிகள் உள்ளன.இந்நிலையில், ஒட்டுண்ணிகள், நன்மை செய்யும் பூச்சிகளை அழிக்க கூடிய பூச்சி மருந்துகளை பயன்படுத்த கூடாது.

இந்நிலையில், வேப்பமரத்தின் விதைகள், இலைகள், வேர்களில் காணப்படும் அசாடிராக்டின் பிரித்து எடுக்கப்பட்டு, சின்ன தென்னை மரங்களுக்கு தெளிக்கப்படுகிறது.

உயரமான மரங்களுக்கு மருந்து தெளிக்க முடியாது. இதை வேர் வாயிலாக கொடுத்தால், தென்னை மரத்தின் மேல் பகுதி வரை செல்கிறதா; இயற்கை வழி பூச்சிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா, இதை பாலிமர் என்ற பொருளோடு கலந்து கொடுப்பது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது.

வேளாண் பல்கலை வளாகத்தில் உள்ள தென்னை மரங்களில் சோதனை செய்யப்படும். அதன்பின் வயல்வெளியில் சோதனை செய்து விவசாயிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். இதுபோன்ற சோதனைக்காக, தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக, 16 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, கூறினார்.

வேளாண் பல்கலை இணை பேராசிரியர் கண்ணன் கூறுகையில், வேப்ப மரத்தில் இருந்து எடுக்கப்படும் அசாடிராக்டின், சூரிய ஒளியில் புறா ஊதாக்கதிர்கள் மேலே படும் போது, அதனை செயல் இழக்க செய்து விடும்.

சூரிய ஒளிக்கதிர்கள் பட்டாலும், பாதிக்கப்படாமல், பாலிமர் கோட்டிங் கொடுத்து பால் போன்ற திரவமாக மாற்றி, மெதுவாக செலுத்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு நாள் மட்டும் பயன் உள்ள மருந்து, 10 நாள் வரை தாக்குப்பிடித்து பூச்சிகளை அழிக்கிறதா என்பதற்காக சோதனை மேற்கொள்ளப்படுகிறது, என்றார்.

விழிப்புணர்வு


வேளாண் பல்கலை துணை வேந்தர் (பொ) தமிழ்வேந்தன் கூறுகையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதியில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த, விழிப்புணர்வு முகாம் நடக்கிறது. இயற்கை வழியில் ஒருங்கிணைந்த மேலாண்மை பின்பற்றுவது குறித்து விளக்கப்பட்டது.

பொள்ளாச்சி, ஆனைமலை பகுதி மட்டுமின்றி தஞ்சாவூர், கன்னியாகுமரி உள்ளிட்ட எல்லா பகுதிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளை ஈக்கு இதுவரை, எந்த மருந்தும் பரிந்துரைக்கவில்லை என்றார்.

எம்.எல்.ஏ., மீது எம்.பி., குற்றச்சாட்டு!


ஆனைமலை, சுப்பேகவுண்டன்புதுாரில் நடந்த விழிப்புணர்வு முகாமில், ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.முகாமில் பங்கேற்ற எம்.பி., ஈஸ்வரசாமி, நிருபர்களிடம் கூறுகையில், தென்னையில், நோய் தாக்குதலால் ஏற்படும்பாதிப்பை தடுக்க, தமிழக பட்ஜெட்டில், 12 கோடி ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கியுள்ளார். வெள்ளை ஈயை கட்டுப்படுத்த ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் புதிய ஒட்டுண்ணிகள் தயாரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.இந்த பகுதியில், எம்.எல்.ஏ.,வாக இருப்பவர், விவசாயத்துக்கான எந்த திட்டங்களும் செய்யவில்லை. கடந்த, 10 ஆண்டுகளாக வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் இருந்தும் அதை கட்டுப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை, என்றார்.






      Dinamalar
      Follow us