தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விதைப்பந்து வீசி சுற்றுச்சூழலை காக்கும் பசுமைப்படை மாணவர்கள்

விதைப்பந்து வீசி சுற்றுச்சூழலை காக்கும் பசுமைப்படை மாணவர்கள்

விதைப்பந்து வீசி சுற்றுச்சூழலை காக்கும் பசுமைப்படை மாணவர்கள்


UPDATED : ஜூலை 06, 2026 04:49 PM

ADDED : ஜூலை 06, 2026 04:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2026 04:49 PM ADDED : ஜூலை 06, 2026 04:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சுற்றுச்சூழலை மாசடையாமல் காப்பது மானிடர்களை பிறந்த அனைவரின் கடமையாகும். அதற்காக மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிப்பது, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது, குப்பையை கண்ட இடங்களில் கொட்டுவதை தவிர்ப்பது, தேவையின்றி மின் சாதனங்கள், வாகனங்கள் பயன்படுத்துவதை குறைப்பதும் ஒரு வகையான சுற்றுச்சூழல் மாசடைவதை தவிர்க்கும் வழிமுறைகளாகும்.

இது பற்றி பள்ளியில் பயிலும் பருவத்தில் இருந்தே மாணவர்களுக்கு பயிற்சியாக அளிப்பது பெற்றோர்கள், ஆசிரியர்களின் கடமையாகும். இதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் பசுமை படை, என்.எஸ்.எஸ்., அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் உள்ள மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத் துாய்மை, பசுமையாக பராமரித்தல், பள்ளிக்கு அருகில் உள்ள பகுதிகளையும் பசுமையாக பராமரித்தல், ஆண்டு தோறும் மரக்கன்றுகள் நடவு செய்தல், மலைப்பகுதிகளில் வீசி சென்ற பாலிதீன் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பணிகள் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மேற்கொள்ளபடுகிறது. அந்த வகையில் பெரியகுளம் தென்கரை ஜே.ஆர்.ஆர்., நகர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் கூட்டு முயற்சியில் பள்ளி வளாகத்தை பசுமை வளாகமாக மாற்றி உள்ளனர்.

பள்ளி வளாகம் முழுவதும் வேம்பு, புங்கை, வாகை உள்ளிட்ட மர வகைகளால் நிரம்பி உள்ளது. இது தவிர மூலிகை தோட்டத்தில் துளசி, கீழாநெல்லி, துாதுவளை, கற்றாழை, செம்பருத்தி உள்ளிட்ட செடிகள் வளர்த்து வருகின்றனர். தோட்டத்தில் வளரும் மூலிகை, பூச்செடிகளின் பயன்பகள் பற்றி மாணவர்களுக்கு வகுப்புகளில் விளக்குகின்றனர். மேலும் மாணவர்களிடம் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.

பசுமையான பள்ளி வளாகம் கரோலின் நிர்மலா ராணி, பள்ளி முதல்வர்:

மாணவர்கள், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் வளாகம் முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. வியாழன் தோறும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் பற்றி வகுப்பு எடுக்கப்படுகிறது. மேலும், வீடுகளில் மரங்கள், செடிகள் பராமரிப்பு பற்றி விளக்குகிறோம். மாடித்தோட்டம், வீட்டுத்தோட்டத்தில் பயன்படும் தொழில்நுட்பங்கள் பற்றியும் கூறுகிறோம்.
விதைப்பந்து தயாரிப்பு

மரிய புஷ்பம், பள்ளி பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்:

கோடை காலத்தில் கிடைக்கும் விதைகளை சேகரித்து விதைப்பந்துகள் தயாரிக்கிறோம். விதைப்பந்து தயாரிக்க மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். தயாரித்த விதைப்பந்துகளை பசுமைபடை மாணவர்களை அழைத்து சென்று பெரியகுளம் அருகே உள்ள கிராம பகுதிகள், நேருநகர், செம்மண்குழி, கும்பக்கரை, சோத்துப்பாறை செல்லும் ரோட்டின் அருகே உள்ள பகுதிகளில் வீசுகிறோம்.
விதைப்பந்துகளில் உள்ள விதைகள் மரக்கன்றுகளாக வளர்ந்துள்ளன. கிராமங்கள், நகர்பகுதியில் ரோட்டோரங்கள், குளக்கரைகளில் மரக்கன்றுகள் நடவு செய்கிறோம். விதைப்பந்துகள் தயாரிக்கும் பணியை துவங்க உள்ளோம், என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us