தேசிய வில்வித்தை போட்டிக்கு கே.வி., கில்நகர் மாணவர் தகுதி
தேசிய வில்வித்தை போட்டிக்கு கே.வி., கில்நகர் மாணவர் தகுதி
UPDATED : ஜூலை 06, 2026 04:48 PM
ADDED : ஜூலை 06, 2026 04:49 PM
சென்னை:
தேசிய வில்வித்தை போட்டிக்கு, சென்னை கில் நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் தேர்வாகி உள்ளார்.
மத்திய அரசின் பி.எம்., ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இடையிலான, சென்னை மண்டல வில்வித்தை போட்டி, அடையாறு சி.எல்.ஆர்.ஐ., கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதில், சென்னை மண்டலத்திற்கு உட்பட்ட தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் பகுதிகளின் பள்ளிகளைச் சேர்ந்த 540 மாணவ - மாணவியர் பங்கேற்று, திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது பிரிவுகளாக தனித்தனியாக நடந்தன. இதில், 14 வயது பிரிவில், சென்னை கில் நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 8ம் வகுப்பு மாணவர் ஹேமந்த், 14, இந்தியன் போ - 30 மீ., பிரிவில் மூன்றாவது இடத்தை கைப்பற்றி, வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றியால், வரும் செப்டம்பர் மாதம் டில்லியில் நடக்க உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பையும் ஹேமந்த் பெற்றுள்ளார்.
தேசிய போட்டிக்கு முன்பாக, மத்திய அரசு சார்பில், ஏழு நாட்கள் சிறப்பு பயிற்சியும் அவருக்கு வழங்கப்பட உள்ளது.
