டென்மார்க்கில் கல்வி, வேலை கோவை கல்லுாரியில் விளக்கம்
டென்மார்க்கில் கல்வி, வேலை கோவை கல்லுாரியில் விளக்கம்
UPDATED : அக் 18, 2025 10:32 AM
ADDED : அக் 18, 2025 10:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:
ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியில், டென்மார்க்கின் முன்னணி பல்கலையைச் சேர்ந்த பிரதிநிதிகள் கல்வி மற்றும் ஆராய்ச்சி உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்க வருகை தந்தனர்.
ஆர்ஹஸ் பல்கலையின், சரா கிராம் மற்றும் சதர்ன் டென்மார்க் பல்கலையின் ஹெல்லே யிடிங் சோரன்சன் ஆகியோர், கல்லுாரி முதல்வர் சுதா மற்றும் நிர்வாகத்தினருடன் சந்தித்து கலந்துரையாடினர். மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடலில், டென்மார்க் நாட்டின் கல்வி வாய்ப்புகள் குறித்து பேசினர்.
உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகள், பல்வேறு கல்வித் திட்டங்கள், ஐரோப்பிய தொழில் இணைப்பு வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.