UPDATED : அக் 18, 2025 10:32 AM
ADDED : அக் 18, 2025 10:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள், பாரதியார் பல்கலை இறுதி தேர்வில் வெற்றி பெற்றனர்.
பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவர்கள், பாரதியார் பல்கலை கல்லுாரிகளுக்கு இடையே நடந்த இறுதி தேர்வில் வெற்றி பெற்று பல்கலை தரவரிசையில் முன்னிலை பெற்றனர்.
பாதுகாப்பியல் துறை மாணவி கவிதா இரண்டாமிடமும், குருரவிசங்கரி மூன்றாமிடம், கவின் நான்காமிடமும், தேவிகராஜூ எட்டாமிடமும் பெற்றனர்.வணிகவியல் துறை மாணவர் தர்ஷன் மூன்றாமிடம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களை கல்லுாரி தாளாளர் ரத்தினம், செயலாளர் அருள்மொழி, கல்லுாரி முதல்வர் கண்ணன், வணிகவியல் துறை முதன்மையர் சபரிநாதன் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.