UPDATED : அக் 24, 2025 08:16 AM
ADDED : அக் 24, 2025 08:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:
கடந்த, 20ம் தேதி, தீபாவளி பண்டிகை; சொந்த ஊர் சென்றவர்கள், திரும்ப வசதியாக, தீபாவளிக்கு மறுநாள் (21ம் தேதி) பொது விடுமுறையென தமிழக அரசு அறிவித்தது. இதற்கு மாற்றாக, வரும், 25ம் தேதி (நாளை) பள்ளிகள், கல்வி அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் காளிமுத்து தெரிவித்துள்ளார்.
கனமழை காரணமாக, கடந்த, 22ம் தேதியும் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது; இதற்கு மாற்றாக பள்ளி செயல்படும் நாள் குறித்த அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் எனவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

