ஆசிரியைகளை நோக்கி கண்காணிப்பு கேமரா புகார் கல்வித்துறை விசாரணை
ஆசிரியைகளை நோக்கி கண்காணிப்பு கேமரா புகார் கல்வித்துறை விசாரணை
UPDATED : செப் 01, 2025 12:00 AM
ADDED : செப் 01, 2025 08:40 AM

மதுரை:
திருமங்கலம் அரசு உதவிபெறும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியைகளை நோக்கி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக எழுந்த புகார் குறித்து கல்வித்துறை விசாரணை நடத்துகிறது.
திருமங்கலம் பி.கே.என்., ஆண்கள் பள்ளி ஆசிரியைகள் சி.இ.ஓ., ரேணுகாவிடம் அளித்த மனுவில், 'இப்பள்ளி உபரி ஆசிரியை சபரியம்மாள் 5 ஆண்டுகளாக காணவில்லை. பதவி உயர்வுக்கு தகுதியுள்ள ஆசிரியர்களை 'பதவி உயர்வு வேண்டாம்' என எழுதிக்கொடுக்க நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது. வகுப்பறையில் ஆசிரியைகள் பாடம் நடத்தும்போது அவர்களை நோக்கி கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது' உள்ளிட்ட புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக உதவி பெறும் பெண்கள் பள்ளி மீது புகார் அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் தவறானது.
கல்வி அதிகாரி கூறுகையில், சம்பந்தப்பட்ட பள்ளி புகார் குறித்து டி.இ.ஓ., அளவிலான விசாரணை நடக்கிறது. அதன் அறிக்கை இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட பின் நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றார்.