sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்வி அலுவலர் தேர்வு மாற்றம்

கல்வி அலுவலர் தேர்வு மாற்றம்

கல்வி அலுவலர் தேர்வு மாற்றம்


UPDATED : பிப் 11, 2026 04:53 PM

ADDED : பிப் 11, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 11, 2026 04:53 PM ADDED : பிப் 11, 2026 04:54 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வு நடக்க உள்ள தேதியில், குரூப் 2, 2ஏ தேர்வுகளை அறிவித்ததால், மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., கடந்த 8ம் தேதி, குரூப் 2, 2ஏ தேர்வுகளை நடத்துவதாக அறிவித்திருந்தது. அன்று, சென்னையில் தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் ஏற்பட்டன. இதனால், அந்த தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதன்பின், அந்த தேர்வுகள் மார்ச் 15ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஏற்கனவே, மார்ச் 12 முதல் 15ம் தேதி வரை, குரூப் 1சி பணிகள் பிரிவில், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அதே தேதியில், குரூப் 2, 2 ஏ தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு, மார்ச் 22 முதல் 25ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us