UPDATED : அக் 26, 2024 12:00 AM
ADDED : அக் 26, 2024 11:14 AM
நாமக்கல்:
கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, மாவட்ட கல்வி அலுவலர் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி திருச்செங்கோடு அடுத்த காடாச்சநல்லுார் தனியார் பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி அணிகள் கலந்து கொண்டன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி, பல சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. ஆனால், இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், கோப்பையையும் பரிசாக பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் பாராட்டினார். மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன் ஆகியோரும் பாராட்டப்பட்டனர்.
பள்ளி துணை ஆய்வாளர் பெரியசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.