UPDATED : ஜூலை 17, 2026 08:40 PM
ADDED : ஜூலை 17, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
கடலுார்:
கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. விழாவில், பள்ளியின் சேர்மன் சிவக்குமார் தலைமை தாங்கினார்.
பின், ஓவியம், கட்டுரை, வினாடி வினா, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி, காமராஜர் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினார்.
பள்ளி துணை முதல்வர் மதுரபிரசாத் பாண்டே பேசினார். விழாவில், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
